Categories: சினிமா

தற்காப்பு கலையில் மட்டுமல்ல புரூஸ்லீ இவற்றிலும் வல்லவர்தான்.. இதுவரை அவர் பற்றி பலரும் அறியாத தகவல்..!

Spread the love

வெறும் 32 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் இளைஞர்களின் பேவரேட் நாயகன் புரூஸ்லீ. ஆனால் புரூஸ்லீ மனிதரே இல்லை என்று சொல்லப்படுகிறது. மனிதர்களால் இதையெல்லாம் கண்டிப்பாக செய்யவே முடியாது என்று சொல்லும் பல விஷயங்களை புரூஸ் லீ மட்டும் தான் செய்துள்ளார். அவருக்கு பின்னால் வந்த யாராலும் அவரை கிட்ட நெருங்கவே முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இப்படி ஒரு உடல் தோற்றம் கொண்ட அவரால் எப்படி நிகழ்த்த முடியும், உண்மையில் மனிதப் பிறவியில் இவரை யாராலும் ஜெயிக்க முடியாது. அவர் உடம்பில் கத்தியை கொண்டு தாக்கினாலும் கத்தி இறங்காது என்று பலரும் கூறுவார்கள். இளம் வயதில் இருந்தே கராத்தே குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று வந்தவர்.

அதில் ஒரு முக்கியமான தாக்குதல் முறை தான் சைட் கிக். இதை அனைவராலும் அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது. இது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதனால் தான் அவர் நடித்து அனைத்து படங்களிலும் இந்த சண்டை இருக்கும். அதுவும் படத்தில் பார்க்கும்போது இளைஞர்களை முறுக்கேற்றும் அளவுக்கு அந்த காட்சிகள் அமைந்திருக்கும். கிட்டத்தட்ட 45 கிலோ கிராம் எடை கொண்ட மணல் மூட்டையை சிதறடிக்கும் நிபுணராக இன்று வரை அவர் மட்டும்தான் உள்ளார். தற்காப்பு கலையில் மட்டுமே வல்லவர் என்று அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இவர் நடனத்திலும் வல்லவர்தான்.

நடனத்தில் இவ்வாறு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன்பு ஹாங்காங்கில் குழந்தை நட்சத்திரமாக 20 படங்களில் நடித்துள்ளார். புரூஸ்லீயின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஹேர்ஸ்டைலிஷ் ஜெஃப்ரிங். புரூஸ்லீக்கு கண் பார்வை பிரச்சனை இருந்ததால் அவர் பெரிய கண்ணாடி போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். முதல்முறையாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தியவர் புரூஸ்லி தான். அமெரிக்காவில் தற்காப்பு பயிற்சி பள்ளி ஆரம்பிக்கும்போது புரூஸ்லீக்கு நடிகராக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. 1963ஆம் ஆண்டு அவரிடம் தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வந்த லிண்டா மேரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்காப்பு கலையில் பல நுணுக்கங்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் புரூஸ்லீ. இவர் அறிமுகப்படுத்திய நுணுக்கங்களை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். நாள்தோறும் 5000 பஞ்ச்களை பயிற்சி எடுக்கக் கூடியவர் புரூஸ்லீ. என்னதான் தற்காப்பு கலையில் மன்னராக இருந்தாலும் இவர் எப்போதும் தன் கையில் துப்பாக்கி வைத்திருப்பாராம். புரூஸ் லீ வீட்டில் 2000 புத்தகங்கள் கொண்ட பெரிய நூலகம் ஒன்று உள்ளது. மல்டி டாஸ்கிங் முறையில் ஆர்வம் கொண்ட புரூஸ்லீ பயிற்சி எடுத்துக் கொண்டே புத்தகங்களை படித்துக் கொண்டும் டிவியை பார்ப்பாராம்.

Nanthini

Recent Posts

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

2 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

9 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

14 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

15 minutes ago

“அரசாங்க சொத்துன்னு பார்த்ததில்லை.. டாஸ்மாக்கை தீ வச்சேன்”… பெரம்பூரில் ‘புரட்சி’ கிளப்பும் திலகபாமா… அதிர்ந்த தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…

27 minutes ago

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

39 minutes ago