ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.
அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.
இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரம்யா பாண்டியன், தனக்கு தற்போது திருமணம் குறித்த எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் சினிமாவை மட்டுமே அதிகம் காதலிப்பதாகவும் அதனுடன் மட்டுமே தற்போது கமிட்டாகி இருப்பதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் இன்னும் சில வருடங்களில் திருமணம் செய்து கொள்வேன் எனவும் அப்படி திருமணம் நடந்தால் தனக்கு காதல் திருமணம் இதுதான் ஆசை எனவும் அவர் கூறியுள்ளார்.