இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் RRR திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ராம்சரனுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அது மல்டி ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அரவிந்த சமேத வீரராகவர் திரைப்படம் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ரிலீசானது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆறு வருடங்களுக்கு பிறகு இப்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவாரா திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. கொராட்டாலா சிவா மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி இரண்டாவது திரைப்படம் இது. முன்னதாக சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த ஜனதா கேரேஜ் என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது. தேவாரா திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சைப் அலிகான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ் நந்தமுரி கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக வேலை பார்த்து உள்ளார். கடந்த 1980 1990க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேவாரம் கொண்டாட்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வகையில் தேவாரா படம் ரிலீஸ் ஆகும் தியேட்டருக்கு முன்பு ரசிகர்கள் அரிவாளால் ஆட்டை வெட்டி தலையை துண்டாக்குகின்றனர். பின்னர் போஸ்டரின் முகத்தில் ஆட்டின் ரத்தத்தை தெளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நடிகர்களுக்கு பால் அபிஷேகம், பூமாலை என கொண்டாட்டம் இருந்த நிலையில் இப்போது ஆடு பலி கொடுத்து ரத்தத்தால் அபிஷேகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Devara FDFS Celeb😱
*** Violence Warning***
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 26, 2024