இணையத்தில் கொஞ்சமும் பரபரப்பு குறையாமல் இன்றளவும் பேசப்பட்டு வருவது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தான். ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை. புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல ஒவ்வொரு நாளும் அவரது பிரச்சினை வெளிவந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி ஜெயம் ரவி விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட பின்பு பாடகி கெனிஷா உடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டார். பாடகி கெனிஷாவால் தான் ஜெயம்ரவி மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்தாதாக பேசி வந்தனர். இந்நிலையில் அதைப்பற்றி ஜெயம் ரவி தனது பிரதர் திரைப்பட ஆடியோ லாஞ்சில் பர்சனல் லைபை பிரைவேட்டா இருக்க விடுங்க. பாடகி கெனிஷாவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருப்பார்.
பாடகி கெனிஷாவும் சமீபத்திய நேர்காணலில் எனக்கும் ஜெயம் ரவிக்கும் இருப்பது தொழில்முறை நட்புதான். நான் ஒரு ஹீலர் என்பதால் அவர் விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட பிறகு தான் என் உதவி நாடி வந்தாரே தவிர அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விளக்கம் அளித்து இருப்பார். அதற்கு அடுத்ததாக ஜெயம் ரவி ஆர்த்தியின் மீது போலீசில் புகார் செய்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் தனது உடைமைகளை அங்கிருந்து மீட்டு தரும்படியும் போலீசில் புகார் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது அதற்கு அடுத்ததாக ஆர்த்தியின் வீட்டில் ஜெயம் ரவி என்னென்ன கொடுமைகளை அனுபவித்திருக்கிறார் என்பது பற்றி செய்திகள் இன்று இணையத்தில் பரவி வருகிறது.
அது என்னவென்றால் ஆர்த்தி வீட்டில் ஜெயம் ரவிக்கு மரியாதையே கிடையாதாம். வேலைக்காரர்களுக்கு முன்னாடி கூட ஆர்த்தி ஜெயம் ரவியை அவமானப்படுத்துவாராம். மம்மிக்காக படம் பண்ணுங்க என்று ஆர்த்தி சொல்லுவாராம். அதன்படி ஜெயம் ரவி வருடத்திற்கு ஒரு படம் தனது மாமியாரின் ப்ரொடக்ஷனில் செய்திருக்கிறார். அதுதான் பூமி சைரன் அடங்கமறு திரைப்படங்கள். படம் வெளிவந்த பிறகு ஜெயம் ரவியின் மாமியார் ஒரே லாஸ் ஆயிடுச்சு அப்படின்னு கணக்கு காட்டி திட்டுவாராம். ஆனால் சில நாட்களுக்கு பிறகு ஜெயம் ரவி அசிஸ்டன்ட்டை வரவழைத்து கணக்கு பார்க்கும் போது நல்ல லாபமே இருந்திருக்கிறதாம். ஆனால் அவர் மாமியார் ஜெயம்ரவியை ஏமாற்றியிருந்திருக்கிறார். இதை பதில் திருப்பி கேட்கும் போது தான் எல்லா பிரச்சினையும் வந்திருக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து அவரது ரசிகர்கள் இது என்ன ரியல் சந்தோஷப்பிரமணியம் போல ஜெயம்ரவி வாழ்க்கையில் நடக்கிறதே என்று அவருக்காக பரிதாபப்படுகின்றனர் வேதனைப்படுகின்றனர். தற்போது இந்த செய்தி தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.