“எல்லோரையும் தூக்குங்க” அசிங்க அசிங்கமா பேசினாங்க… ஒரு நடிகைக்கே இந்த நிலைமை… நடிகை ரம்யா பரபரப்பு புகார்..!!

By Soundarya on ஆவணி 19, 2025

Spread the love

வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரம்யா. இவர் முன்னாள் காங்கிரஸ் எம்பி ஆவார்.  இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும் பாலியல் அச்சுறுத்தல் கொடுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவர் புகார் அளித்ததையடுத்து இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சமூக வலைதளங்களை தனக்கு இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்து இருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து தைரியமாக புகார் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.