அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் ரகசிய உலகம்… விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உண்மை… வியக்க வைக்கும் தகவல்..!

By Divyamayakannan on ஆவணி 19, 2025

Spread the love

அண்டார்டிகாவில்  விஞ்ஞானிகள்  பனிக்கு அடியில் மறைந்திருந்த ரகசியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நீர் மூழ்கி பள்ளத்தாக்குகளை ஆராய்ச்சியாளர்கள் IBCSO v2 மூலம் உருவாக்கப்பட்ட மேம்பட்ட கடலடி வரைபடத்தை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்கள் . கடலுக்கடியில் நெடுஞ்சாலைகள் போல செயல்பட்டு ஊட்டச்சத்துக்கள், படிவுகள் மற்றும் தண்ணீரை கடற்கரையில் இருந்து ஆற்கடலுக்கு நகர்த்துகின்றன.

இது சுமார் 4000 மீட்டர்  ஆழம் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். சூடான நீரை பனிப்பாறைகளின் அடியில் செலுத்தி அவற்றை உருகுவதற்காக காரணமாக உள்ளன. மேலும் குளிர்ந்த நீரை ஆழ்கடலுக்குள் தள்ளி, Antarctic Bottom water போன்ற உலகளாவிய கடல் நீரோட்டங்களுக்கு உதவுகின்றன. இதுபோல் நூற்றுக்கணக்கான பள்ளத்தாக்குகள் அண்டார்டிகாவில் மறைந்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள கடல்களில் இது போன்ற பள்ளத்தாக்குகள் இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.

   

U வடிவில் பள்ளத்தாக்குகள் கிழக்கு அண்டார்டிகாவிலும், V வடிவில் பள்ளத்தாக்குகள் மேற்கு அண்டார்டிகாவிலும் காணப்படுகிறது. இதுவரை பூமியின் கடலடியில் வெறும் 27% மட்டுமே வரைபடமாக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.