நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் இணைந்து ஜாலியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. இவர் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993-ஆம் ஆண்டு வெளியான ‘ஆ ஒக்கடு அடக்கு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகவே திரையுலகில் கால் பதித்திருந்தார். இவர் திரையுலகை விட்டு விலகி இருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் அதே பிரபலத்துடன் தான் காணப்படுகிறார்.
நடிகை ரம்பா ‘சுந்தர புருஷன்’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் நடித்த ”உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இதை தொடர்ந்து அவர் செங்கோட்டை, அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உட்பட பல ஹிட் படங்களிள் நடித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து திரையுலகில் இருந்து விலகிய இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இவர் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இவர் தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் இணைந்து கொண்டாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது படுவைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ…..
ரூ. 15 மதிப்புள்ள ஆர்டருக்கு ரூ. 500 டிப்ஸாகப் பெற்ற ப்ளிங்கிட் டெலிவரி ஊழியரின் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக…
விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…