நடிகை ராதிகா மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அடக்கடவுளே என்னாச்சு அவருக்கு..? வெளியான தகவல்..!!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகரான எம் ஆர் ராதாவின் மகள்தான் ராதிகா சரத்குமார். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமான ராதிகா அடுத்த இரண்டு ஆண்டுகளில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை கச்சிதமாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

பாக்கியராஜ், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என 80 காலகட்டத்தில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய முடிகளிலும் முன்னணி ஹீரோவுகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் ராதிகா டெங்கு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 5 நாட்கள் கழித்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.