மாநில பதவி எல்லாம் இல்ல, நான் ஸ்ட்ரெய்ட்டா சென்ட்ரல் தான்.. விஜயதரணி நச் பதில்…!

By Nanthini on ஆடி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இந்த முறை கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நடிகை குஷ்புவுக்கு துணை மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் பொறுப்பு கூட வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இது தொடர்பாக பேசிய விஜயதரணி, தனது பெயர் தேசிய பட்டியலில் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒருவேளை அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.