சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த ‘கோ’ பட நடிகை.. வருங்கால கணவருடன் வெளியிட்ட அழகிய புகைப்படம் வைரல்…!

By Begam on ஐப்பசி 19, 2023

Spread the love

தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பின் கமல் ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார். சுமார் 10 வருடங்களாக கனவு கன்னியாக நீடித்தார்.இவர் 1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.  இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும்  நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

   

 

நடிகை கார்த்திகா நாயர் கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது அதன் பிறகு தொடர் தோல்விகள் கண்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சுருங்கியது. ஒரு கட்டத்தில் சீரியல் தொடர்களிலும் தன்னை வெளிக்காட்டினார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கார்த்திகா.  இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. வருங்கால கணவர் உடன் கார்த்திகா நாயர் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி இருக்கிறது.  இதோ அவரே வெளியிட்ட வைரல் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)