‘மூஞ்ச ஒடச்சிடுவேன்’… அடிதடியில் இறங்கிய போட்டியாளர்கள்… சூடு பிடிக்கும் பிக் பாஸ் வீடு…

By Begam on அக்டோபர் 19, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி  6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள்.

 

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் . கடந்த வாரம் எவிக்ஷன் எதுவும் இல்லை ஆனால் இந்த முறை கட்டாயம் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

   

 

இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே ‘ஆக்சிஜன் எமர்ஜென்சி’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டிருந்தது. முதல் ப்ரோமோவில் எந்த வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதிகம் சிலிண்டர்களை கைப்பற்றி வைத்துள்ளார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து இருவீட்டாரும் தாக்கிக் கொண்டதில் ஸ்மால் பாஸ் வீட்டின் கண்ணாடி உடைந்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்பொழுது இரண்டாவது பிரமோ வெளியாகியுள்ளது.  இதில் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் விஜய் வர்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையில் பெரிய சண்டை வெடித்துள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விதமாக தற்பொழுது இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ…