தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி. பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் பக்கம் வந்த இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்கள் நடித்துள்ளார். சீரியலில் நடித்து வந்த ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அதேபோல் உப்பு கருவாடு, மெய் நிகரே, ஃபயர் போன்ற தமிழ் படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தினேஷ்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், சில வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கு இடையில் விவாகரத்து பிரச்சனையும் ஒருபக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

#image_title
தற்போது, நடிகை ரச்சிதா கையில் துப்பாக்கியுடன், காவல்துறை கெட்டப்பில் ஆவேசமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அடுத்த தமிழ் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதாக ரச்சிதா ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். மேலும், இந்த போஸ்டர் வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் அதோடு கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறதை விட இதை ஆக்குங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View this post on Instagram
