Mgr vs Jaya

மக்கள் திலகத்துக்கே நடிப்புக்கு தடை போட்ட முக்கியப் புள்ளி.. ப்ளாஷ் நியூஸ்-ஆல் அப்போது பதறிய தமிழகம்..

By John on ஜனவரி 26, 2024

Spread the love

மூன்று வேளை உணவிற்காக நாடகங்களில் நடித்து, பின்னர் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பெரியார், அண்ணா, போன்றோரின் நட்பினைப் பெற்று இந்திய சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பெற்றிருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு நடிப்பின் மீதான மோகம் மட்டும் குறையவே இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடிப்புக்கு தடை போட்ட ஒரு பெரிய வரலாற்றுச் சம்பவமே நடந்துள்ளது.

   

அரசியலில் முதல்வர் அரியணையில் ஏறிய எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை தீர்ந்தபாடில்லை. அப்படி ஒருநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சார்பில் சினிமா எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை வெளியானது. இந்த பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவில், எம்.ஜி.ஆர், இயக்குனர் முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   
Mukatha

#image_title

 

அப்போது பேசிய முக்தா சீனிவாசன், சினிமாவில் பல கருத்துக்களை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் முதல்வர் ஆகிட்டீங்க, இனிமேல் அப்படி யார் சொல்வார் என கேட்டுள்ளார். இதன்பிறகு விழாவின் இறுதியில் பேசிய எம்.ஜி.ஆர், இனி தொடர்ந்து பாதி நாள் ஆட்சியிலும், பாதி நாள், சினிமாவிலும் இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

யார் இந்த DIGITAL கஜினி முகமது..? 17 முறை தோல்வி..ஆனால் இன்று 4000 கோடி வர்த்தகம்

ஆனால் எம்.ஜி.ஆர் பேசிய இந்த கருத்து, அப்போது பிரதமராக இருந்த மொராஜிதேசய்க்கு தெரிய வந்த நிலையில், அன்று இரவே எம்.ஜி.ஆரை தொலைபேசியில் அழைத்த அவர், முதல்வராக இருந்துகொண்டு நீங்கள் நடிக்க கூடாது. அப்படி நடிக்க வேண்டும் என்றால் முதல்வராக வேறு ஒருவரை நியமித்து விட்டு நடியுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் உடனடியாக இந்த செய்தியை நிறுத்தும்படி எல்லா பத்திரிக்கைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

Morarji

#image_title

அதன்படி அனைத்து பத்திரிக்கைகளும் செய்தியை நிறுத்தி விட்ட நிலையில், தினத்தந்தி மட்டும் செய்தியை வெளியிட்டு விட்டதால், மறுநாள் மறுப்பு செய்தியை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் முதல்நாள் இந்த செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எவ்வளவுதான் தெளிவாக இருந்தாலும் சில விஷயங்களில் நம்மை அறியாமலேயே வார்த்தைகளை வெளியிடுகிறோம் என்பதற்கு எம்.ஜி.ஆரும் தப்பவில்ல.