நடிகர் மைக் மோகன் பூர்ணிமாவை காதலித்து வந்ததாக கூறி பழைய விஷயங்களை கிளறி பேசி வருகிறார் சபிதா ஜோசப்.
தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக வளம் வந்தவர் நடிகர் மைக் மோகன். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் போட்டி போட்டு மிகப்பெரிய பிரபலமாக இருந்த இவர் பல சர்ச்சைகள் காரணமாக சினிமாவை விட்டு விலகினார். இவருக்கு உடலில் மோசமான நோய் இருப்பதாக வதந்திகள் வெளியானதை தொடர்ந்து இவரின் சினிமா வாழ்க்கை அப்போதே முடிந்து விட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஹீரோவாக ஹரா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயின் கோட் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மூடுபனி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான மோகனுக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது கிளிஞ்சல்கள். அந்த திரைப்படத்தில் தான் மைக் மோகனுக்கு ஜோடியாக பூரணிமா நடித்திருப்பார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பூர்ணிமா நடிகர் மோகனை காதலிக்க தொடங்கியதாகவும், அதற்குப் பிறகு இருவரும் பாம்க்ரூப் ஹோட்டலில் காரில் அமர்ந்து கொண்டு பேசியிருப்பதை பார்த்த பாக்கியராஜ். இருவரையும் சேர்த்து வைத்து கேலி செய்து பேசியதாக கூறியிருக்கின்றார் சபிதா ஜோசப். மேலும் கிழிஞ்சல்கள் படத்தை தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை அந்த சில நாட்கள், விதி உள்ள திரைப்படங்களிலும் இருவரும் சேர்ந்து நடித்ததால் இருவரும் காதலித்து வருவதாக அப்போது பல வதந்திகள் வெளியானது என்று சபிதா ஜோசப் பகீர் கிளப்பி இருக்கின்றார்.
நடிகர் பாக்கியராஜ் பிரவீனா என்ற நடிகையை 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் மன்மதலீலை, பில்லா, டாக்கி டிரைவர், பசி, பாமா ருக்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரவீனா தனது 25 வயதில் உயிரிழந்து விட்டார். இவர் உயிரிழந்ததை தொடர்ந்து டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் தான் பாக்கியராஜ் பூர்ணிமாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.
பின்னர் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மோகன் பூர்ணிமாவை காதலித்து வந்த நிலையில் பாக்கியராஜ் தான் இடையில் புகுந்து பல வேலைகளை செய்து பூர்ணிமா மனதையும் மாற்றி அவர் திருமணம் செய்து கொண்டதாக மூத்த பத்திரிகையாளரான சபிதாஸ் ஜோசப் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.