தொடர்ச்சியாக வெற்றி அடையும் படங்கள்.. பல லட்சம் மதிப்பில் சொகுசு கார் வாங்கியுள்ள ‘பருத்திவீரன்’ முத்தழகு..

By Begam on மாசி 28, 2024

Spread the love

இயக்குனர் அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றபடம் பருத்தி வீரன். கிராமத்து கதையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது.

   

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, படத்தின் நாயகியாக முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் படம் மூலம் கிடைத்தை வரவேற்பை அடுத்து பலவேறு படங்களில் நடித்த இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் சாருலதா என்ற படத்தில் நடித்திருந்தார்.

   

 

2012ல் வந்த இந்த படத்திற்கு பிறகு இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழக்கையில் செட்டில் ஆகிவிட்டார். இதன்பிறகு  7 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். பேமிலி மேன், ஹிட் ஸ்டோரி, சர்வம் சக்திமயம் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வெற்றிக்காணும் பிரியா மணி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி என்ற அந்த சொகுசு காரின் விலை ரூ. 75 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.