விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த சீரியல் தான் ‘பாரதி கண்ணம்மா’. மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது.

முதல் சீசனில் ஹீரோ பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியாக, டாக்டர் வெண்பாவாக நடித்து மிரள வைத்தவர் நடிகை ஃபரீனா.

ஃபரீனா இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அவர் 2017ல் ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கர்ப்பமான அவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அவர் தொடரில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்தார்.

இவருக்கு தற்பொழுது ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. சமூகலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பரினா. இவரின் கதாபாத்திரத்தை கொண்டு இவரை திட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்தார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பரீனாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் நடுக்கடலில் கிளாமரில் எல்லைமீறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி..? என்று முகம் சுளித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

