நடிகை பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பார்வதி. இவர் தமிழ் சினிமாவில் பூ என்கின்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்த அறிமுகமானார். அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மரியான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
பின்னர் பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைதள பக்கங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அதாவது அவர் திருமணமான புகைப்படம் ஒன்றையும், கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். என்னது நடிகை பார்வதிக்கு திருமணமாகி கர்ப்பமாக இருக்காங்களா?
எப்ப கல்யாணம் ஆச்சு என்று புலம்பித் தவித்து வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு திரைப்படத்திற்கான ஷூட்டிங் ஆகும். முதல் நாள் காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கின்றார். இதே போல் தான் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பிரக்னன்சி கிட் மற்றும் அதில் கர்ப்பம் அடைந்து இருந்தால் ஏற்படும் இரட்டைக் கோடு ஆகியவற்றுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் பார்வதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே அதுக்குள்ள அவர் கர்ப்பமாகி விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வந்தார்கள். அதுவும் ஒரு திரைப்படத்தின் புகைப்படம் தான். அந்த படத்தை வெளியிட்டு அதிசயங்கள் ஆரம்பித்துவிட்டன என்ற கேப்ஷனையும் பகிர்ந்து இருந்தார். அதேபோல தான் தற்போது இந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கின்றார் நடிகை பார்வதி.
View this post on Instagram