எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஹரிப்பிரியா புது நடனப்பள்ளி ஒன்றை தொடங்கியிருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் என்ற சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தவர் தான் ஹரிப்ரியா. இவர் விஜய் டிவியின் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர். அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நடித்திருந்தார். பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகிய மிகப்பெரிய வெற்றி அடைந்த பிரியமானவள் என்ற சீரியலில் நடித்திருந்தார்.
இந்த சீரியலில் இசை என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக நடித்த சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் தன்னுடைய ரோலை மிகச் சிறப்பாக செய்தார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். பல வருடம் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் பின்னர் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவரின் பிரிவுக்குப் பிறகு ஹரிப்பிரியா தன்னுடைய கெரியரில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.
தற்போது வரை சின்னத்திரையில் கலக்கி வருகின்றார். எதிர்நீச்சல் சீரியலில் அப்பாவி குணம் கொண்ட நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு மிகப்பெரிய அளவு ரீச் கிடைத்தது. இந்த சீரியல் பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், 744 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்தது யாரும் எதிர்பாராத ஒன்று என பலரும் கூறி வந்தார்கள்.
மேலும் இறுதி கட்டப்படபிடிப்பின் போது அனைத்து நடிகைகளும் ஆரத்தழுவி பிரியாவிடை கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. சீரியலில் நடித்து வந்த ஹரிப்ரியா தற்போது நடன பள்ளி ஒன்றை தொடங்கியிருக்கின்றார். பரதநாட்டியத்தின் மீது தீராத பிரியம் கொண்டவர் ஹரிப்பிரியா அதனை பயிற்றுவிக்கும் ஆசிரியராக தற்போது உருமாறி இருக்கின்றார்.
காலி கல்பா என்று தனது நடன பள்ளிக்கு பெயரிட்டு இருக்கின்றார். கோடம்பாக்கம் மற்றும் போரூர் என இரண்டு இடங்களில் வகுப்புகள் நடத்த இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகளை எடுப்பதாக அறிவித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியல் முடிந்த பிறகு அடுத்த கட்ட முயற்சியாக இதனை தொடங்கி இருக்கின்றார் ஹரிப்பிரியா. இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.