எமி ஜாக்சனின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் முகத்தை என்ன பண்ணி வச்சிருக்காங்க பிளாஸ்டிக் சர்ஜரியா? என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக ப் பிரபலமானவர் எமி ஜாக்சன். பிரிட்டன் நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் மாடலும் கூட, மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் 2010 ஆம் ஆண்டு ஏஎல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் ஒரு வெளிநாட்டு பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வாய்ப்பு கிடைக்க பிஸியாக நடித்து வந்தார். முதல் தமிழ் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் அதை தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, கெத்து உள்ளிட அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் பின்னர் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் பிரிட்டன் நாட்டுக்கே சென்றார். அங்கு ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆன்ரோ என்ற ஆண் குழந்தைக்கு அம்மாவானார். குழந்தை பிறந்த பிறகும் ஜோடியாக சுற்றி திரிந்து வந்த இந்த தம்பதிகள் திடீரென்று பிரேக்கப் செய்து கொண்டார்.
தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் டேட்டிங் செய்து வருகின்றார். விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஜனவரி மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் தனது 4 வயது மகனுடன் எமி ஜாக்சன் கலந்துகொண்டு அசத்தியிருந்தார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார் எமி ஜாக்சன் .

சமீப காலமாக அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். அவரின் முகம் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இது என்ன பிளாஸ்டிக் சர்ஜரியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏஞ்சலினா ஜோலி போல் மாற ஆசைப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் பார்ப்பதற்கு மிக மோசமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். மதராசபட்டினம் திரைப்படத்தில் இருந்து அழகிய முகத்தை மிஸ் செய்வதாகவும் கூறி வருகிறார்கள்.
