தலன்னா சும்மாவா.. துபாயில் ரேஸ் காரில் சீறிப்பாய்ந்த அஜித்.. வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்..!!

By admin on ஆனி 26, 2024

Spread the love

பிரபல நடிகரான அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தள்ளிக் கொண்டு போனது. பின்னர் அர்பைஜானில் வைத்து விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை நடத்தினர்.

அஜித் குமார் - தமிழ் விக்கிப்பீடியா

   

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதி கட்டப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

   

Ajith is not a gentleman, he cheated me: Producer Manickam Narayanan slams  actor | நடிகர் அஜித் ஜென்டில்மேன் இல்லை என்னை ஏமாற்றிவிட்டார் ...!  தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு

 

ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது டூப் போடாமல் நடிகர் அஜித்தும் ஆரவும் இணைந்து காரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து காட்சிகளை பட குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அஜித்துக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

Album - துபாயில் நடிகர் அஜித் குமார் - லேட்டஸ்ட் ஆல்பம் | Actor Ajith Kumar  in Dubai

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 20-ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் தொடங்கப்பட்டது. இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகரான ஜான் கோக்கன் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் குமார் துபாயில் வைத்து ரேஸ் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by John Kokken (@highonkokken)