அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டார்.. 2 கோடி பணம் கேட்டு மிரட்டுகிறார்.. நடிகை பார்வதி நாயரின் பதிவு வைரல்..!!

By Priya Ram on அக்டோபர் 2, 2024

Spread the love

நடிகை பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பார்வதி நாயர் வீட்டில் 18 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. இது குறித்து பார்வதி நாயர் அளித்த புகாரி அடிப்படையில் சுபாஷ் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சுபாஷ் என்பவர் தயாரிப்பு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்க்கிறார். மேலும் பார்வதி நாயரின் போட்டோ ஷூட்டுக்கும் உதவி செய்துள்ளார்.

   

 

   

மேலும் வீட்டு வேலைகள் செய்யவும் பார்வதி நாயருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பார்வதி நாயர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கூறியதாவது, வழக்கில் சுபாஷின் பெயர் சேர்க்கப்பட்டவுடன் அதனை அகற்றுமாறு என்னை மிரட்டினார். தயாரிப்பு நிறுவனத்தினர் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். எனது அனுமதி இல்லாமல் அந்தரங்க புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அது பற்றியும் புகார் அளித்ததால் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.

 

 

சுபாஷ் என்னை பற்றி தவறாக பேசியதால் சுபாஷ் தரப்பில் பரப்பப்படும் செய்திகளை வெளியிட நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கினேன். அதனை மீறி சுபாஷ் என் மீது அவதூறு பரப்பினார்.இந்த நிலையில் சுபாஷ் கற்பினர் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மெரட்டி வழக்கை வாபஸ் வருமாறு கூறுகின்றனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன் இரு தரப்பையும் பேசி சமாதானம் செய்யுமாறு நீதிமன்றம் கூறியது.

ஆனால் சுபாஷ் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் எனது படம் ரிலீஸ் ஆனது அதேவேளையில் என் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போதும் பணம் கேட்டு சுபாஷ் சென்னை மிரட்டினார். என்னை பற்றி தவறாக இண்டர்வியூவில் பேசி வருகிறார். எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசி கொலை மிரட்டல் விடுகிறார்.

எனது பெற்றோர் வெளிநாட்டில் இருக்கின்றனர். நான் சென்னையில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு சுபாஷ் இப்படி பல தொந்தரவு கொடுக்கிறார். இது எனது மனம் மற்றும் உடலை பாதிக்கிறது. எனது வாழ்க்கையை எதிர்காலம், புகழ் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது. பொதுமக்கள் உண்மை என்ன என்பதை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீதி கட்டாயம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

author avatar
Priya Ram