சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், வீட்டில் கொலு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. வீட்டின் அருகில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மீனாவின் அம்மா, தங்கை மற்றும் விஜயாவின் தோழி பார்வதி, ரோகிணியின் தோழி வித்யா என பலரும் இந்த கொலு பூஜையில் கலந்து கொள்கின்றனர். விஜயாவின் நடன பள்ளியில் இருக்கும் காதல் ஜோடியும் வீட்டிற்கு வர இவர்கள்தான் அன்னைக்கு தவறாக நடந்து கொண்டவர்கள் என்று முத்துவிடம் மீனா கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற விஜயா பூஜை செய்கிறார். பிறகு அவர் பாட்டு பாட அமரும் நிலையில், பாட ஆரம்பித்ததும் வீட்டு அருகில் உள்ள நாய்கள் அனைத்தும் ஊளையிட்டு குலைக்கின்றன.
இதனைக் கண்டு அனைவரும் சிரிக்கிறார்கள். பிறகு முத்து நாயை விரட்டி விட்டு வர விஜயா அலைபாயுதே கண்ணா பாட்டை பாட ஆரம்பிக்கிறார். அனைவரும் அவருடைய பாட்டை கேட்க சகிக்காமல் நின்று கொண்டிருக்கும்போது விஜயாவின் கணவர் மட்டும் ஒன்ஸ்மோர் என்று கூற திரும்பத் திரும்ப விஜயா அந்த பாட்டை பாடுகிறார். பிறகு வீட்டின் அருகே இருக்கும் ஒரு நபர் முத்துவை அழைத்து ஏன் உங்க அப்பா பொம்பள குரலில் பாடி கொண்டிருக்கிறார் என்று கிண்டல் செய்ய உடனே கோபத்தில் விஜயா எழுந்து செல்கிறார். பிறகு மீனா பூஜைக்கான பாட்டை பாடி சிறப்பிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்க விஜயா கூறும் நிலையில் முத்து தன்னுடைய செல்போனை கீழே வைத்து விட்டு செல்கிறார். அப்போது ரோகினியின் தோழி வித்தியா செல்போனை நாசுக்காக அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிலையில் முத்து அதனை கவனித்து செல்போனை வாங்கி விடுகிறார். இன்று கொலு பூஜை முடிவடைந்த நிலையில் இரவு மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா நீங்க ரொம்ப நல்லவர்தான் ஆனா குடியை மட்டும் எடுத்துட்டீங்கனா மகான் ஆயிடுவிங்க என்று கூறுகிறார். உடனே முத்து நான் மனுஷனா இருந்தா போதும் என்று கூறுகிறார். இப்படியே இருவரும் பேசிக் கொண்டிருக்க இன்றுடன் சிறக்கடிக்க ஆசை சீரியல் எபிசோடு முடிவடைகிறது.