பிரபல நடிகையான நிவேதா தாமஸ் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக மேடையில் பேசியிருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். அதைத்தொடர்ந்து போராளி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கியிருப்பார். இப்படத்தை தொடர்ந்து நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடிகர் ஜெய் ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் தான் இவருக்கு ஒரு அளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு அவர் ஹீரோயினியாக நடித்த படங்கள் சரிவர ஓடாத காரணத்தால் குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கினார். பின்னர் ஜில்லா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இவர் பின்னர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த திரிஷியம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் காண பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து நிவேதா தாமஸுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல வாய்ப்புகள் கிடைத்தது. கமலுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் அடுத்ததாக ரஜினிக்கு மகளாக தர்பார் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதில் தந்தை மகளாக இவர்கள் இருவரின் காம்போ மிகச் சிறப்பாக ஒர்க் அவுட்டாகி இருந்ததாக பலரும் தெரிவித்தார்கள்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிவேதா தாமஸ் முழுக்க முழுக்க தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். அண்மையில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் தான் நடிக்கும் 35 வது திரைப்படத்தை பற்றி பேசியிருந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்வது குறித்து தான் பேசுகிறார் என்ற பலரும் கதை கட்டி விட்டார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிவேதா தாமஸ் தனது திருமண வதந்திகள் குறித்து பேசி இருந்தார். அதில் தனக்கு திருமணமாகி விட்டதாக வெளியான தகவலை பார்த்து எனது அம்மா என்னிடம் கேட்டார். திருமணம் மட்டும்தான் ஆகிவிட்டதால் இல்லை குழந்தைகளை ஏதாவது இருக்கின்றதா என்று கிண்டல் செய்தார்.

#image_title

#image_title

#image_title
அதற்கு மேடையில் பதில் அளித்த நிவேதா தாமஸ் இதுதான் என்னுடைய கணவர், இவர்கள் இருவரும் எனது இரண்டு மகன்கள். மூத்தவன் பெயர் அருண், இளையவன் பெயர் வருண் என்று கூறியிருந்தார். அதாவது அந்த திரைப்படத்தில் தனது கணவராக நடித்தவரையும் தனது குழந்தைகளாக நடித்தவரையும் தான் அவர் கூறியிருந்தார். இது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.