இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு வயது குழந்தை பல நடிகர்களுக்கு மகளாக நடித்தவர்.. யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..!!

By admin on ஆவணி 17, 2024

Spread the love

சோசியல் மீடியாவில் பிரபல நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது நிவேதா தாமஸின் சிறு வயது புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. பிரபல நடிகையான நிவேதா தாமஸ் விஜய்யின் குருவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சமுத்திரகனி இயக்கத்தில் உருவான போராளி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

   

 

   

இதனை அடுத்து ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடித்தார். நிவேதா தாமஸ் ஹீரோயினாக நடித்த படங்கள் அவ்வளவாக மக்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனால் நிவேதா தாமஸ் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன ஜில்லா திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்தார்.

 

27 வயதான நடிகை நிவேதா தாமஸ்-ஆ இது!! டிரான்ஸ்பெரண்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.. - விடுப்பு.கொம்

அந்த படத்தில் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம் திரைப்படம். அதில் கமல்ஹாசனின் மகளாக நிவேதா தாமஸ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? வைரலாகும் பாபநாசம் மீம்ஸ் – News18 தமிழ்

அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. முக்கியமாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நிவேதா தாமஸ் நடித்தார். ரஜினிக்கும் நிவேதா தாமசுக்கும் இடையே அப்பா மகள் செண்டிமெண்ட் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆனது. அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் வராமல் தெலுங்கு சினிமாவில் நிவேதா தாமஸ் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது நிவேதாவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கியூட்டாக இருப்பதாக கமென்ட் செய்து வருகின்றனர்.