பிக்பாஸ் தமிழ் சீசன்-8.. போட்டியாளராக களமிறங்கும் காதல் மன்னன்.. இதுக்காகவே ஷோ பாக்கலாம் போலையே..!

By Nanthini on ஆவணி 17, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசன் அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார்.

   

இந்த நிலையில் தன்னுடைய திரைப்படப் பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விளக்குவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில் இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.  விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பற்றிய ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.

   

 

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெயரில்  இன்ஸ்டா புகழ் திவாகர் பெயரும் அடிபட்டு வருகிறது. இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறுகையில், வாய்ப்பு வந்தால் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னிடம் நிறைய பேர் சொல்கிறார்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் பெயரும் இருக்கிறது என. அதனால் என்னை கூப்பிட்டால் நான் கண்டிப்பாக போக தயார் என்று அவரை கூறியுள்ளார்.

இந்த நிலையில் நிபுணர் திவாகரை குறிக்கிட்டு, ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொன்னால் போவீர்களா என்று கேள்வி கேட்டதற்கு எந்த வாய்ப்பாக இருந்தாலும் நான் தயார் என்று அவர் கூறியுள்ளார். திவாகரை காதல் மன்னன் என்று தான் அனைவரும் அழைத்து வருகிறார்கள்.  ஏனென்றால் தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து காதல் திரைப்படங்களையும் தன்னுடைய நடிப்பால் ரீமேக் செய்து அவர் காட்டியுள்ளார். தனது திறமையால் அனைத்து நடிகர்கள் போலவும் தன்னால் நடிக்க முடிகிறது என்ற திவாகர் சொன்னாலும் இது ரசிகர்கள் மத்தியில் ட்ரோலாக தான் பார்க்கப்படுகிறது.