90 களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைதொடர்ந்து அவர் செந்தூரப்பூவே, சூரசம்காரம், பட்டிக்காட்டுத்தம்பி, என் கணவர், கைவீசம்மா கைவீசு, சொந்தக்காரன், பொறுத்தது போதும்,
பாண்டி நாட்டு தங்கம், இணைந்த கைகள், பறவைகள் பலவிதம், மருதுபாண்டி, காவலுக்கு கெட்டிக்காரன், மைந்தன், பாரம்பரியம், சிலம்பாட்டம், படிக்காதவன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை நிரோஷா.
இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சினிமா வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் தள்ளி இருந்த நடிகை நிரோஷா ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக கலக்கி கொண்டு வரும் நடிகை நிரோஷா சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் . தற்பொழுது இவர் தனது கணவர் ராம்கி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…