என்ன பொசுக்குன்னு இப்படி இறங்கிட்டீங்க.. என்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நியாயமும் ஒன்னு இருக்குல்ல..!

By Mahalakshmi on ஆடி 10, 2024

Spread the love

நடிகை நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக குறைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரளாவாக இருந்தாலும் ஐயா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

   

   

அதைத் தொடர்ந்து நடிகர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார். தனது கெரியரில் என்னதான் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி சாதித்து காட்டி இருக்கின்றார் நயன்தாரா. மேலும் பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆகவும் இருந்து வருகின்றார்.

 

இவர் இயக்குனர் விக்னேஷ் அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த குழந்தைகளை வளர்ப்பதில் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை நயன்தாரா அந்த அளவுக்கு ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் தமிழில் வெளியான அன்னபூரணி திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். மேலும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் கவின் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிகையின் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின் டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்தார் . இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் தற்போது புதிய திரைப்படத்தை எடுக்க இருக்கின்றார். அதில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.

இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா தனக்கு 15 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டிருந்தாராம். இதை கேட்டு ஷாக் ஆகிப்போன தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத்தை கைவிட்டு விடலாம் என்று எண்ணியதாம். ஆனால் கடைசியில் நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 10 கோடியாக குறைத்து இருக்கின்றார். இதனால் இப்படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.