அவருக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு.. 3 நொடி வீடியோவுக்கு 10 கோடி கேட்க்கிறார்.. நேரடியாக தனுஷுக்கு 3 பக்க லெட்டர்-ஐ எழுதி அனுப்பிய நயன்..

By Nanthini on கார்த்திகை 16, 2024

Spread the love

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் காதல் உருவானது குறித்தான ஆவண படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த ஆவணப்படம் சில தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப் போனது. அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்த நிலையில் நயன்தாரா படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

Nayanthara Netflix: நயன்தாரா அப்படியும் அழகு... இப்படியும் அழகு... உருகிய விக்னேஷ் சிவன்! - vignesh shivan shares feelings about nayanthara - Samayam Tamil

   

இந்த வழக்கு விவகாரம் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து ஒரு வழியாக சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நெட்பிலிக்ஸ் விவகாரத்தில் நடிகர் தனுசுக்கு கடிதம் எழுதியுள்ள நடிகை நயன்தாரா சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், அன்புள்ள திரு.தனுஷ் கே ராஜா, பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காக இது உங்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம். நல்ல நடிகர் மற்றும் பிரபலமான இயக்குனருமான நீங்கள் உங்களுடைய தந்தை மற்றும் உங்களின் சகோதரர் ஆதரவுடன் ஆசியுடன் இதனை படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

   

Nayanthara documentary is releasing on Netflix, to be out on her birthday | Nayanthara: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ; எப்போது தெரியுமா?

 

சினிமா என்பது என்னை போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். எனது netflix ஆவணப்படத்தின் வெளியீடு நான் மட்டுமல்ல எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. படத்திற்கும் எனது கூட்டாளிகளுக்கும் எனக்கும் எதிராக நீங்கள் கொதித்துக் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணங்கள் எங்களை மட்டுமல்ல இந்த திட்டத்திற்காக தங்கள் நேரத்தையும் கொடுத்த மக்களையே பாதிக்கிறது.

எங்கள் NetFlix ஆவணப்பட வெளியீட்டிற்கு உங்களின் ஒப்புதலுக்காக காத்திருந்த 2 ஆண்டுகள் கழித்து, நீங்கள் அனுமதிக்க மறுத்ததால், தற்போதைய பதிப்பை கைவிடவும் மீண்டும் திருத்தவும் மற்றும் தீர்வு காணவும் முடிவு செய்தோம்.  நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள் இன்றுவரை பாராட்டப்படுகின்றன. ஏனென்றால் பாடல் வரிகள் உண்மையான உணர்ச்சிகளிலிருந்து வந்தவை. எங்கள் ஆவணப்படத்தில் நாங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த இசை இல்லை என்பதை அறிந்து, அதைப் பயன்படுத்த எங்களுக்கு வாய்ப்பளிக்க நீங்கள் மறுத்தீர்கள் அல்லது பாடல்களின் வரிகள் கூட. என் இதயத்தை உடைத்தது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

N A Y A N T H A R A இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nayanthara)