அந்த ஒரு படம்.. 5 வருஷத்துக்கு அது ஒரு பிரச்சனையாவே இருந்துச்சி.. கண் கலங்கிய கெத்து தினேஷ்..!

By Nanthini on கார்த்திகை 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தினேஷ். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல ரிஸ்கான கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திலிருந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றார். ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு சில தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குக்கூ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

டப்பிங் பணிகளை தொடங்கிய அட்டகத்தி தினேஷ்.. எந்த படத்திற்கு தெரியுமா? |  Tamil cinema actor dinesh started dubbing process

   

இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் இவருக்கு தேசிய விருது கொடுக்கலாம் என்ற அளவுக்கு மிகச் சிறப்பாக பாராட்டினர். ஆனால் அவருக்கு விருது எதுவும் கிடைக்காமல் போனது தான் வருத்தம். இந்த திரைப்படத்தில் இவர் கண் தெரியாதவர் வேடத்தில் நடித்திருப்பார். அதிலும் தன்னுடைய கண்ணை வித்தியாசமாக வைத்து நடித்தது மிக சிரமமாக இருந்தது என்று அவரே பல இடங்களில் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விசாரணை மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் இறுதியாக லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

   

ஒரே ஒரு படம் தான் பிளாட்பாரத்திற்கு வந்த குக்கூ பட நடிகர்! பிச்சை எடுக்கும்  நிலை.. - விடுப்பு.கொம்

 

இப்படத்திலிருந்து அட்டகத்தி தினேஷ் என்ற இவரின் பெயர் கெத்து தினேஷ் என மாறிவிட்டது. இந்த நிலையில் கெத்து தினேஷ் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், குக்கூ திரைப்படத்திற்கு பிறகு தனக்கு நேர்ந்த சோகத்தை பகிர்ந்தார். குக்கூ படத்தில் முழுக்க முழுக்க கண்களை வித்தியாசமாக வைத்து படம் முழுவதும் எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இரண்டு வருடங்கள் இப்படியே வைத்திருந்த காரணத்தால் தனக்கு கண்களில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் தாக்கம் சுமார் ஐந்து ஆண்டுகள் வரை நீடித்தது.

குக்கூ' படத்தில் நடித்து நிஜத்தில் பார்வையை இழந்த அட்டகத்தி தினேஷ்!  பா.ரஞ்சித் கூறிய ஷாக்கிங் தகவல்!

இந்த படத்திற்கு பிறகு எங்கேயாவது சூட்டிங் சென்றால் கேமராவை சரியாக பார்க்க முடியாமல் லைட் வெளிச்சம் பட்டால் கண்களை மூடிக்கொள்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அதன் பிறகு மருத்துவரிடம் காட்டி இந்த பிரச்சனையை சரி செய்தேன். அந்த வயசுல அட்டகத்தி படத்துக்கு அப்புறம் நான் என்ன பண்றேன்னு பாரு என்று கெத்து காட்டும் விதமாக ஒரு திமிரு காரணமாகத்தான் அந்த ஒரு படத்தில் நடித்தேன். சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய காட்சிகளை கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு திமிரு தனமாக நடித்தேன் என்று கூட சொல்லலாம். அதன் விளைவாக எனக்கு பின்னாலின் பல பாராட்டுகளும் கிடைத்தது என்று தினேஷ் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.