தனுஷோட படத்துல என் நடிப்பு நல்லா இல்லன்னு வெளிய அனுப்பிட்டாங்க.. மனம் வருந்திய காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன்..!

By Nanthini on கார்த்திகை 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பாவா லட்சுமணன். வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் நடித்து கலக்கி இருப்பார். கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன. பெரும்பாலும் இவர் வடிவேலு காம்பினேஷனில் பல திரைப்படங்களில் நடித்திருப்பார். தமிழ் சினிமா உலகில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை.

கல்யாணமா..? அந்த ஆசையே போச்சு; இதுதான் காரணமே - மனம் திறந்த பாவா லட்சுமணன்! - தமிழ்நாடு

   

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் பொருளாதாரம் நெருக்கடியிலும் உள்ள நிலையில் தனது நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நடிகர் ஜீவா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பண உதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், தனுஷின் புதுப்பேட்டை படத்தில் நடித்தேன், ஆனால் அப்படத்தின் பாதியிலேயே நான் வெளியே வந்து விட்டேன். முதலில் என்னுடைய நடிப்பை பார்த்துட்டு செல்வராகவன் சார் தான் என நடிக்க வான்னு கூப்பிட்டாரு.

   

Pudhupettai 18th Anniversary: Dhanush Declares Kokki Kumar An Emotion, Expresses Gratitude To Brother Selvaraghavan | Times Now

 

சும்மா ஒரு நாள் என் நண்பர் கூட போயிருந்தப்போ ஒரு டிராயர் போட்டுக்கிட்டு போயிருந்தேன். அப்போ புதுப்பேட்டை படத்துல இருந்து கையில கிளாஸ் வச்சிக்கிட்டு இருக்க ஒரு சீன் அந்த இடத்துலயே ஷூட் பண்ணாங்க. பிறகு ஹைதராபாத்தில் இருந்த செல்வராகவன் 40 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துட்டு கிளம்பி வான்னு சொல்லிட்டாரு. நானும் முதல் நாள் போய் நடித்தேன். அப்போ நடிப்பு நல்லா இருக்குனு தான் அவர் பாராட்டினார். பிறகு இரண்டாவது நாள் மூன்றாவது நாள் நடித்த பிறகு நடிப்பு ஒன்று சரியில்ல அப்படின்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.