இந்த புகைப்படத்தில் இருக்கும் 90’ஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கனவுக்கன்னி யார் தெரியுமா?… அடடே இவரா?…

By Begam on ஆவணி 24, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை நமீதா. மிஸ் சூரத், மிஸ் இந்தியா போன்ற பட்டங்களை பெற்றவர் நடிகை நமீதா. விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

அதில் குறிப்பிடத்தக்கவை, சாணக்யா, ஆணை, எங்கள் அண்ணா, அழகிய தமிழ் மகன், பில்லா, இந்திர விழா, ஜகன்மோகினி ,பம்பரக் கண்ணாலே ,வியாபாரி, நான் அவனில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மியா’.இவர் 2017 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

 

இவர்களுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தன்னுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா, கியன் ராஜ் என பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை நமீதாவின் இளம் வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…