Connect with us

Tamizhanmedia.net

அம்மா, அப்பா , அக்கா , தங்கை என மொத்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் அருண் விஜய்… திருஷ்டி சுத்தி போடும் ரசிகர்கள்…

CINEMA

அம்மா, அப்பா , அக்கா , தங்கை என மொத்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் அருண் விஜய்… திருஷ்டி சுத்தி போடும் ரசிகர்கள்…

தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மனைவி முத்துக்கண்ணுவின் பிள்ளையான கவிதா விஜயகுமார் ‘கூலி’ என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார்.

அருண் விஜய் ஹீரோவாக நடித்து  சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த  வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள். ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார்.

தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார். இவரை தவிர மற்ற நான்கு சகோதரிகளும் அவர்களுக்கு ஒரே சகோதரனான அருண் விஜயையும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பும் அரவணைப்புமாக இருப்பது பார்ப்போரை  பொறாமைப்பட வைக்கிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் விஜயகுமார் தனது பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் திருஷ்டி சுத்தி போட்டும் வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

More in CINEMA

To Top