ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை விஜயகாந்த் திட்டிக்கொண்டே இருப்பார்… நளினி பகிர்ந்த எமோஷனல் தகவல்!

By vinoth on மார்ச் 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நளினி. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தான் பணியாற்றிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராமராஜனை திருமணம் செய்துகொண்டார்.

முதலில் இவர்கள் திருமணத்துக்கு நளினி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லையாம். அதனால் ஓடிப்போய்தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் ராமராஜன் மேல் தனக்கு எப்படிக் காதல் பிறந்தது என்பதைக் கூறியுள்ளார்.

   

அதில் “அவர் என் மேல் ஒருதலைக் காதலில் இருந்தார். அந்த விஷயம் எங்கள் வீட்டில் தெரிந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்ததை தெரிந்துகொண்டு அவரை அழைத்துச்சென்று அடித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நமக்காக ஒருவர் அடிவாங்கி இருக்கிறாரே. அவர்களை எல்லாம் நாம் பழிவாங்க வேண்டும். இவரைதான் நான் திருமணம் செய்யவேண்டும் என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

   

 

இப்படி ஒன்று சேர்ந்த அவர்களின் திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் பிரிந்தது. அதன் பின்னர் ராமராஜனும் நளினியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருமே மறுமணம் செய்துகொள்ளவில்லை. அதே போல தங்கள் குழந்தைகளின் திருமணத்தை இருவரும் சேர்ந்து நடத்தி வைத்தனர். விவாகரத்து ஆனாலும் நளினி எந்த இடத்திலும் ராமராஜன் குறித்து எதிரமறையாக பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நளினி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் விஜயகாந்த் உடனான உறவு குறித்து மிகவும் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசியுள்ளார். அதில் “விஜயகாந்த் சார் எனக்கு எப்போதும் அண்ணன்தான். ஆனால் அவரோடுதான் நான் அதிக படங்களில் ஜோடியாக நடித்துள்ளேன். அவருக்கும் டான்ஸ் வராது. எனக்கும் டான்ஸ் வராது. காதல் காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கும். காட்சி முடிந்ததும் நான் அவரை “அண்ணன்” என அழைத்தால், “என்னை அண்ணன் என அழைக்காதே” எனத் திட்டுவார். பிறகு “எப்படி அழைப்பது?” என்று கேட்டால் “மாமா” என்று கூப்பிடு என்பார். நான் முடியாது என்று அண்ணன் என்றுதான் அழைப்பார். எனக்கு விவாகரத்து ஆனபோது முதல் முதலில் என்னை வந்து பார்த்து ‘என்ன உதவி வேண்டுமானாலும் கேள்” என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார்.