ரோட்டுக் கடையில சாப்பிடும்போது கண்கலங்கிய கரண்… அதுக்குக் காரணம் இதுதானாம்- அவரே பகிர்ந்த தகவல்!

By vinoth on பங்குனி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில், குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு இடத்தில் இருந்தவர் நடிகர் கரண். குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப் படங்களில் நடித்தவர். தமிழில் தியாகராஜன் நடித்த தீச்சட்டி கோவிந்தன் தமிழில் இவரது முதல் படம். அந்த படத்தில் அவர் உதவியாளராக தோன்றினார். பின்னர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் சரத்பாபுவின் மகனாக நடித்தார். அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு நடித்த நம்மவர் திரைப்படம்தான் அவரை பிரபலம் ஆக்கியது.

நம்மவர் படத்தில், கமலை எதிர்க்கும் ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க கமல், கரணுக்கு வாய்ப்பளித்தார். நம்மவர் படத்தை தொடர்ந்து ராமன் அப்துல்லா, கண்ணெதிரே தோன்றினாள் என 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து வந்தார். நம்மவர், காதல் கோட்டை, கண்ணாத்தாள், காதல் மன்னன் என பல படங்கள் அவருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தன.

   

2006 ஆம் ஆண்டு வெளியான கொக்கி மற்றும் கருப்பசாமி குத்தகைதாரர்  ஆகிய இரு படங்களும் அவரை ஹீரோவாக்கின. கருப்பசாமி குத்தைகதாரர் திரைப்படம் வெற்றி பெற தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.

   

அதனால் அவர் திரும்ப வில்லன் வேடத்திலும் நடிக்கவிரும்பாமல் சினிமாவை விட்டு விலகிவிட்டார். சில ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. இதுபற்றி சமீபத்தில் வெளியான தகவலின் படி கரண் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறாராம். இந்நிலையில் கரண் தன்னுடைய படமான ‘கொக்கி’ படத்தில் நடித்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை சில வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்துள்ளார்.

 

அதில் “நான் கொக்கி படத்தில் நடிக்கும்போது ரோட்டோரக் கடையில் சாப்பிடுவது போன்ற காட்சி. அந்த காட்சியை எதார்த்தமாக எடுக்கவேண்டும் என நினைத்த இயக்குனர், என்னை அந்த கதாபாத்திரத்தின் மேக்கப்போடு ஒரு கடையில் போய் சாப்பிட சொன்னார். நான் ஒரு கடையில் சென்று சாப்பிட்டேன். அவரால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாப்பிட்டதும் எனக்குக் கண் கலங்கியது. கடைகாரர் என்னசார் காரமா இருக்கா? என்றார். ஆனால் நான் காரத்தால் கண்கலங்கவில்லை. நாமெல்லாம் எவ்ளோ ருசியான சாப்பாடு சாப்பிடுகிறோம்? ஆனால் இன்னும் பல பேர் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்குறத சாப்பிடுவறங்க எத்தனையோ பேர் இருக்காங்களேன்னு நெனச்சுதான் கண்கலங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.