தமிழில் அதா சர்மா சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அந்த படத்தில் வரும் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு கவர்ச்சி குத்து போட்டிருந்தார். தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீவிர உணர்ச்சியினால் ஆட்பட்டிருக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார்.

இவரின் நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காகச் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

பாலிவுட்டில் ஹசீ தோ பசீ படம் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டில் தோன்றியிருந்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னடத்தில் வெளியான விக்ரமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதோடு தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ள இவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

6.1 மில்லியன் பாலோவர்ஸை கொண்ட அதா ஷர்மா அவ்வப்போது ரசிகர்களை ஈர்க்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

