அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் இளையராஜா. இதனை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி இசை தேவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இசை உலகின் உன்னதம் என்று கருதப்படும் நிகரற்ற சிம்பொனி இசையை உருவாக்கியுள்ளார். அதில் இசை கண்டக்கராக மைக்கேல் என்பவர் செயல்பட சுமார் 77 இசைக் கலைஞர்கள் ஒரு மணி நேரம் நான்கு பாகங்களாக இளையராஜாவின் அசைவுகளுக்கு இணங்க சிம்பொனி இசையை வாசித்து அசத்தினர்.
இளையராஜாவின் சிம்பொனி இசை பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலை இளம் இசை அமைப்பாளர் லிடியன் நாதஸ்வரத்தை தான் துணைக்கு வைத்துக் கொண்டு இளையராஜா சிம்பொனி இசையை எழுத சொல்லி இருக்கிறார் என்ற வதந்தி ஒன்று திடீரென்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதற்கு சமீபத்தில் இளையராஜா விளக்கம் அளித்தார். அதில், லிடியன் நாதஸ்வரம் என்னுடைய மாணவன் தான். இசையை என்னிடம் தான் கற்று வருகிறான். ஒருமுறை அவன் சிம்பொனி ஒன்றை இசையமைத்திருக்கிறேன் என என்னிடம் வந்து ஒரு இசையை இசையமைத்து காட்டினான். சில நொடிகள் கேட்டதுமே நிறுத்து என சொல்லிட்டேன். இது சிம்பொனி இசை கிடையாது சினிமா பிஜிஎம் என அவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தேன்.
அது மட்டும் தான் மற்றபடி சிம்பொனி இசையை யாரை வைத்தும் எழுதவில்லை என்ற இளையராஜா விளக்கம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் இந்த விளக்கத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அதில், தனது 14 வயதிலேயே world best Talent போட்டியில் வெற்றி பெற்ற உலகப் புகழ் பெற்றவர் லிடியன் நாதஸ்வரம். 2022 ஆம் ஆண்டு இளையராஜாவை சந்தித்த பிறகு தன்னை அவரது முதல் மற்றும் ஒரே சீடனாக ஏற்றதை மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் குறிப்பிட்டார். தற்போது திருக்குறளின் 1330 குறள்களுக்கும் பின்னணி இசை அமைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த இசைத் தொகுப்பு வெளியானால் தமிழர்களின் புகழ் உலகெங்கும் எதிரொளிக்கும்.
ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து உலக அரங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியவர். தற்போது அவருக்கு 20 வயது தான். 80 வயதை தாண்டிய இளையராஜாவிடம் சிம்பொனி இசை குறித்த விளக்கங்களை சமீபத்தில் கேட்டுள்ளார். அதில் தான் செய்த இசை முயற்சியையும் அவருக்கு காட்டியுள்ளார். தனது பேரன் வயதுள்ள சிறுவன் மற்றும் ஒரே சிஷ்யன் என்பதால் அவருக்கு இளையராஜாவே சிம்பொனி பயிற்சி அளித்திருக்க வேண்டும். ஆனால் உனது சிம்பொனி இசை சினிமா பாடல் போல உள்ளது, சிம்பொனியை முழுமையாக கற்றுக் கொண்டு வா என கூறியுள்ளார்.
அதோடு விடாமல் இதை பொதுவெளியிலும் கூறி லிடியணை சிறுமைப்படுத்துவது பெரிய மனுஷனுக்கு அழகா?. திரை இசையில் தன்னை மீறி எவனும் இல்லை என்று ஆடிய போது ஏ ஆர் ரகுமான் வந்து அவரது பட்டத்தை அடக்கினார். அப்போது ஆரம்பித்த சரிவு 33 ஆண்டுகள் ஆகியும் மீளவில்லை. தன்னுடைய சிம்பொனியில் தனக்கு போட்டியாக மற்றொரு தமிழன் அதுவும் 20 வயது சிறுவன் வந்து விடக்கூடாது என்ற எரிச்சல்தான் இவரை இப்படி பேச வைத்துள்ளது. உங்கள் இசையின் மேன்மையை உங்கள் ஆவணம் தொடர்ந்து கீழே இறக்கி வருகிறது. எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்த போவது கிடையாது என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.
https://x.com/tamiltalkies/status/1899286494139093387