நான் இன்னும் கல்யாணம் பண்ணாததுக்கு காரணம் இதுதான்.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த நடிகை மும்தாஜ்..!!

By admin on சித்திரை 6, 2024

Spread the love

பிரபல நடிகை மும்தாஜ் டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா திரைப்படம் மூலம் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மலபார், போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் மும்தாஜ் நடித்துள்ளார்.

   

பல பாடல்களுக்கு மும்தாஜ் கவர்ச்சியாக நடனமும் ஆடியுள்ளார். இந்த நிலையில் 43 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மீக விஷயங்களில் மும்தாஜ் பெரும் ஈடுபாடோடு உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மும்தாஜ்க்கு இன்னும் ஏராளமான ரசிகர்கள் வந்தனர்.

   

 

ஒரு முறை மும்தாஜ் அளித்த பெட்டியில் கூறியிருப்பதாவது, நான் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். ஒரு கட்டத்தில் இறைவனை நாடார் தொடங்கிவிட்டேன். திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பலவாறு பேசுகின்றனர். எனக்கு 25 வயது இருக்கும்போது ஆட்டோ இம்யூனிட்டி நோய் இருப்பது தெரியவந்தது.

இதனால் திருமண வாழ்க்கையில் இருக்க முடியாது என்பதை உணர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். இதுதான் நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம். மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்ப்பேன். அப்போது எனக்கும் அப்படி இருக்க தோன்றுகிறது. ஆனால் மனரீதியாக நான் அதற்கு தயாராக இல்லை என்பதை உண்மை என ஓப்பனாக பேசி உள்ளார்.