“நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு விவேக் கேட்டாரு…” அப்ப நடந்தது இது தான்…. பல ஆண்டு சீக்ரெட்டை கூறிய நடிகை மோகினி…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2025

Spread the love

90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மோகினி. இவர் ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு படங்களில் பிஸியாக நடித்து வந்த மோகினி கடந்த 1999-ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மோனிகா பரத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் மோனிகா அளித்த பேட்டியில் மறைந்த நடிகர் விவேக் பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, விவேக்கிற்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இருந்து என் கூட நடிச்சிட்டு இருந்தாரு. ஒருமுறை பேசாம நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று விவேக் என்னிடம் கேட்டார். நான் என்னை கிண்டல் பண்றீங்களா என்று சொல்லி சிரிச்சிட்டேன். அவர் சும்மாதான் கேட்டார். நான் எவ்வளவு எமோஷனலா மனசையே உங்ககிட்ட கொடுக்கலாம் என்று பார்த்தேன் இப்படி சிரித்து கவுத்துட்டீங்களேன்னு கிண்டல் பண்ணிட்டு இருப்பார் என மோகினி வெளிப்படையாக கூறியுள்ளார்.