ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம்… நான் சொல்றேன் கேளுங்க… விஜய் அதிரடி பேச்சு…!

By Nanthini on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் திருச்சியில் தொடங்கினார். திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு அரியலூர் சென்று இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் நாகை வந்துள்ளார். பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சற்றுமுன்  தேர்தல் பரப்புரை ஆற்றிய போது, நாம் இந்த பிரச்சாரத் திட்டத்தை போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை சனிக்கிழமை என கேள்வி எழுந்தது.

அது ஒன்றும் இல்லை. ஏன் சனிக்கிழமைகள் மட்டும் பிரச்சாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரம் இறுதி நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். சிலருக்கு ஓய்வு கொடுக்கவே ஓய்வு நாட்களில் பிரச்சாரம் செய்கிறேன். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா? அதனால்தான் ஓய்வு நாட்களாக பார்த்து திட்டமிடப்பட்டது. அங்கு அனுமதியில்லை இங்கு அனுமதியில்லை என எத்தனை கட்டுப்பாடுகள். அத்தனையும் சொத்தையான காரணங்கள். ஐந்து நிமிடம்தான் பேச வேண்டும், பத்து நிமிடம்தான் பேச வேண்டும் என கட்டுப்பாடு. நான் பேசுவதே மூன்று நிமிடம்தான். அதிலும் இதை பேசக்கூடாது, அதை பேசக்கூடாது என கட்டுப்பாடு போடுகிறார்கள் என விஜய் பேசியுள்ளார்.