நடிகை மெஹரின் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசான கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பில்லோரி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
அதே ஆண்டு தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். தமிழில் மெஹரின் தனுசுக்கு ஜோடியாக பட்டாஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மெஹரின் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்தார்.சமீப காலமாக கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் மெஹரின் அதிகமாக கவனம் செலுத்துகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மெஹரின் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் Belize நாட்டிற்கு ட்ரிப் சென்ற மெஹரின் நீச்சல் உடையில் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.