இத போட்டுட்டு வாங்கண்ணே..! பட்டு வேட்டியை பரிசளித்த ரசிகர்.. ஆசையாய் கட்டிக்கொண்டு வந்த விஜய் சேதுபதி.. வீடியோ..

By Mahalakshmi on வைகாசி 30, 2024

Spread the love

ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் திருமண விழாவில் நடிகர் விஜய் சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

   

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்து இவர் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். ஹீரோவாக மட்டுமில்லாமல் ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்த அசத்தி வருகின்றார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.

   

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழபுதூரை சேர்ந்த ஜெயபாஸ் விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் தலைவராக இருந்து வருகின்றார். அவரது தம்பி ஜெயபால் நாகை மாவட்ட ரசிகர் மன்ற துணைச்செயலாளராக இருந்து வருகின்றார். இந்த இரு சகோதரர்களின் திருமண விழா வரும் இரண்டாம் தேதி உசிலம்பட்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மணமக்களை நேரில் சந்தித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி இருவரையும் ஆசீர்வதித்தார்.

தொடர்ந்து மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிற்காக கிளம்பி சென்றார். இவர் மணமக்கள் மற்றும் உறவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது . மேலும் ரசிகர் பரிசாக கொடுத்த பட்டு வேட்டி சட்டையையும் அவர் அணிந்து வந்து காட்டினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.