தமிழில் 2005ல் வெளியான எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த படம் ‘அன்பே ஆருயிரே’. இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை நிலா. இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா. டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர்.
‘அன்பே ஆருயிரே’ படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார் மீரா சோப்ரா. இருப்பினும் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக சென்றடையவில்லை. பட வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் நான் ஸ்டிக் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தமிழில் இவர் குறைந்த அளவில் படங்கள் நடித்து இருந்தாலும் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்றே கூறலாம். தற்பொழுது தமிழ் சினிமாவில் இவரைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அவர் தனது ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் 40 வயது ஆகும் நடிகை மீரா சோப்ராவிற்கு திருமணம் ஆகப்போகிறது என தகவல் வெளிவந்து வைரலாகி வந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ‘ஆம் எனக்கு திருமணம் ஆகப்போகிறது. மார்ச் மாதம் எனக்கு திருமணம் நடக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் என்னுடைய திருமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டனர்’ என கூறியுள்ளார். ஆனால், இதுவரை மீரா சோப்ரா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் யார் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் இணையத்தில் வெளியாகவில்லை.