actress meena

தனியா இருக்கேன் என்பதற்காக என்னை என்ன வேணும்னாலும் பேசலாமா? – கொதித்து போன நடிகை மீனா ஆவேசம்!

By Elango on மாசி 21, 2026

Spread the love

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் மறைந்தார். தனது மகள் நைனிகாவுடன் சிங்கிள் பேரண்ட் ஆக நடிகை மீனா இருந்து வருகிறார். இதற்கிடையே நடிகை மீனா 2வது திருமணம் செய்துக்கொள்வதாக தொடர்ந்து இணையத்தில் தகவல் அவ்வப்போது பரவி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மீனா கூறியதாவது, எனக்கு 2வது திருமணம் என்று பரவும் வதந்திகள் என்னை ரொம்பவே காயப்படுத்தும். முன்னாடி என்னை பத்தின வதந்திகள் எல்லாம் எனக்கு தெரிய ரொம்பவும் லேட் ஆகும்.

ஆனால் இப்போது சோஷியல் மீடியாவில் ஒரு விஷயம் வந்துச்சுன்னா அது பெருசாகி சீக்கிரமாவே வெளியில் தெரிஞ்சுடுது. நான் ஒரு பெண் செலிபிரிட்டி. சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக உண்மை என்னன்னே என்று தெரியாமல் என்னை பத்தி என்ன வேணும்னாலும் பேசலாமா? இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்பவும் கோவமா இருக்கு என்று நடிகை மீனா கோபமாக அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.