actor arjun

இப்போதும் நான் பிட்னஸ் ஆக இருக்க அதுதான் காரணம்… நடிகர் அர்ஜூன் சொன்ன சீக்ரெட்!

By Elango on மாசி 21, 2026

Spread the love

நடிகர் அர்ஜூன் இப்போது 62 வயதிலும் இளமையான தோற்றத்தில் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் காணப்படுகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, நான் ஸ்பெஷலாக எந்த உணவும் சாப்பிட மாட்டேன். வீட்டில் என்ன இருக்கிறதோ அதை தான் சாப்பிடுவேன். ஆனால் நான் ஓட்டலில் பெரும்பாலும் சாப்பிட மாட்டேன். என் பசங்க மட்டும்தான் சாப்பிடுவாங்க.

முடிந்த அளவுக்கு ஓட்டலில் சாப்பிடுவதை நான் தவிர்த்து விடுவேன். வீட்டில் கொஞ்சம் சாதமும் சாம்பாரும் இருக்கிறது என்றால் அதுவே போதும் என்பேன். முட்டை இருந்தால் ஒரு ஆம்லெட் போட்டு கொடுங்க என்று அதை மட்டும் சாப்பிட்டுவேன். நீங்க சாதாரண உணவை சாப்பிட்டும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதுக்கு அடிப்படை என்னவென்றால் நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே உடற்பயிற்சி எல்லாம் செஞ்சு அஸ்திவாரத்தை பலமா போடணும். பிற்காலத்தில் நீங்க சாதாரணமான உணவு சாப்பிட்டால் கூட ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார்.