“சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சொன்னது ஒரு குத்தமா..?” ஆத்திரத்தில் பெட்ரோல் பங்கையே கொளுத்த முயன்ற இளைஞர் – பகீர் பின்னணி..!

By Soundarya on மாசி 21, 2026

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், வாலிபர் ஒருவரின் பொறுப்பற்ற செயலால் பெரும் வெடிவிபத்து ஏற்படவிருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு புகைப்பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்தபோதும், அதனைப் பொருட்படுத்தாத அந்த வாலிபர் ஆத்திரத்தில் தனது லைட்டரைப் பற்றவைத்துள்ளார். அப்போது பெட்ரோல் நிரப்பும் கருவியின் (Nozzle) அருகே தீப்பொறி பட்டவுடன் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் நிரப்பும் இயந்திரம் முழுவதும் நெருப்பு பரவியது.

இந்தத் தீ விபத்தால் அங்கிருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடிய நிலையில், பெரும் பீதி ஏற்பட்டது. இருப்பினும், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சற்றும் பதற்றமடையாமல் துரிதமாகச் செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை (Fire Extinguishers) கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்களின் சாமர்த்தியமான செயலால் ஒரு மிகப்பெரிய வெடிவிபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொது இடங்களில் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.