கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரவிமோகன் நடித்த படங்கள் பலவும் தொடர் தோல்வி படங்களாக இருந்தன. அகிலன் இறைவன் சைரன் 108 காதலிக்க நேரமில்லை பிரதர் என அவரது படங்கள் ஏமாற்றத்தை தந்தன. இந்நிலையில் அவர் பராசக்தி படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். இதில் ரவிமோகன் வில்லன் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டியிருந்தார்.
இப்போது மீண்டும் அவர் வில்லன் கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்கிறார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் பென்ஸ் படத்தில் வில்லனாக நடிகர் ரவிமோகன் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் அவர் இனி வில்லன் கேரக்டரில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கு பல கோடிகளில் அவர் சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
