Categories: சினிமா

ஒங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?… இரயிலில் நள்ளிரவில் பாட்டு பாடிய மனோரமா… பிரபல நடிகை பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

Spread the love

இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.

தமிழகத்தின் ஐந்து முதல்வர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் மனோரமா தன்னை எந்த அரசியல் கட்சியுடனும் இணைத்துக் கொள்ளவில்லை. 50 களின் இறுதியில் தொடங்கிய அவரின் திரைவாழ்க்கை 2010 கள் வரை தொடர்ந்தது. கடைசியாக அவர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மனோரமா இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நடிப்பை ஏனோ தானோவென்று எடுத்துக் கொள்ள மாட்டாராம். மிகுந்த அர்ப்பணிப்போடு அனுகுவாராம். அதற்கு உதாரணமாக நடிகை லட்சுமி ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

மனோரமாவுடன் லட்சுமி ஒருமுறை வெளியூர் ஷுட்டிங்குக்காக ரயிலில் பயணம் செய்தாராம். ஒன்றாக ஜாலியாக அனைவரும் பேசிக் கொண்டே பொழுதை போக்கியுள்ளனர். அந்த களைப்பில் இரவில் அனைவரும் ஆழ்ந்து உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு பாட்டுச் சத்தம் கேட்டிருக்கிறது. அதைக் கேட்டு உறக்கம் கலைந்த நடிகை லட்சுமி கண்விழித்துப் பார்க்கும்போது மனோரமா ஏதோ பாட்டை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம்.

இதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவரிடம் என்னவென்று விசாரிக்க மறுநாள் ஷுட்டிங்கில் அவர் சம்பந்தப்பட்ட காட்சியில் வசனத்திற்கு இடையே பாடுவது போல ஒரு பாடல் இருக்கிறது என்று சொன்னார்களாம்.  அதற்காகதான் அந்த பாடலை பாடி மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம் மனோரமா. இந்த சம்பவத்தைப் பார்த்து லட்சுமி பிரம்மித்து போனாராம். இப்படி ஒரு அர்ப்பணிப்பான நடிகரா என வியந்துள்ளார்.

அவ்வளவு அர்ப்பணிப்பு இருந்ததால்தான் அவரால் 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன்னுடைய கடைசி காலம் வரை புகழ் வெளிச்சத்தில் இருக்க முடிந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

vinoth

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

3 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

3 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

3 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

3 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

3 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

3 மணத்தியாலங்கள் ago