அப்படி சொல்லி தான் கூட்டிட்டு போனாங்க… அஜித் படத்தால என்னோட மொத்த வாழ்க்கையும் போயிருச்சு… புலம்பும் பிரபல நடிகை…!

By Nanthini on மாசி 6, 2025

Spread the love

தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான இன்னொருவன் என்ற திரைப்படத்தில் மனோஹா என்ற பெயரில் அறிமுகமானவர்தான் நடிகை மனோ சித்ரா. பிறகு இயக்குனர் மீனா கதிரவனை சந்தித்தபோது அடுத்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளார். அப்படி நடிகர் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மனோ சித்ரா. அந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவள் பெயர் தமிழரசி.. நடிகை மனோசித்ரா பட்னு சொல்லிட்டாங்க.. சினிமாவிலிருந்து  ஒதுங்க வீரம் படம் காரணம் | Aval peyar tamilarasi movie actress manochithra  say about Veeram ...

   

ஆனால் இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் இவருக்கு அடுத்து பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு பெரிதாக கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடித்த பிறகு 2012 ஆம் ஆண்டு சீனு ராமசாமியின் நீர்ப்பறவை திரைப்படத்தில் மனோ சித்ரா துணை வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து 2014 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் விமலுடன் இணைந்து நேற்று இன்று படத்தில் நடித்தார். பின்னர் அஜித்தின் வீரம் திரைப்படத்திலும் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

அவள் பெயர் தமிழரசி"

 

அதில், வீரம் திரைப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத் , ஒடிசா மற்றும் ஆந்திரா என வெவ்வேறு இடங்களில் நடந்தது. செட்டில் எல்லோருமே ரொம்ப ஜாலியா கதை பேசிட்டு இருப்போம். நடிப்பு பசியில் சென்ற எனக்கு இரண்டு நாளிலேயே இந்த விஷயம் சோர்வை தந்து விட்டது. வேலை செய்வது போலவே தெரியவில்லை. ஒரு பக்கம் செட்டில் தல அஜித் பொங்கல் எல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால் என்னுடைய கதாபாத்திரம் படத்தில் என்ன நிலையில் இருக்கின்றது என்ற எண்ணமே எனக்கு வந்தது. ஆரம்பத்தில் என்னை படத்தில் நடிக்க அழைத்தபோது தமன்னா இறந்து விடுவார் அதன் பிறகு நீங்கள் தான் அஜித்துக்கு ஜோடி என்று தான் கூட்டிட்டு போனாங்க. நானும் அவங்க சொன்னதை நம்பி போயிட்டேன்.

வீரம் படத்தால என் சினிமா வாழ்க்கையே காலி!.. ஏமாத்தி நடிக்க வச்சாங்க.. மனம்  திறந்த மனோசித்ரா..

கடைசியில பார்த்தா அபிநயா, சூசன் என எல்லோரிடமும் இத சொல்லி தான் நடிக்க கூட்டிட்டு வந்தாங்க என்பதை எனக்கு தெரிஞ்சது. அதன் பிறகு இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கேட்டு அழுதேன். நான் அழும்போது கூட அழகா இருக்கேன் என்று சொல்லி அவர் என்னை சமாதானம் செய்தார். பின்னர் அடுத்த இரண்டு நாட்களில் நான் வீரம் படத்தில் இருந்து விலகி தெலுங்கில் நடிக்கப் போயிட்டேன். பிறகு சந்தானம் காமெடி மற்றும் கோவில் சீன்கள் எடுக்க மறுபடியும் என்ன கூப்பிட்டாங்க. அஜித் சாருக்காக போய் நடிச்சு கொடுத்துட்டு வந்தேன். வீரம் படத்தில்தான் என் சினிமா கேரியர் அடி வாங்கியது. எனக்கும் தமிழ் சினிமா மீது வருத்தம் ஏற்பட்டது என மனோ சித்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.