அஜித் மற்றும் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான தாடி பாலாஜி. முதலில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் அதன்பிறகு சின்னத்திரையில் நுழைந்து பிறகு சினிமாவில் ஜொலித்தவர். இவர் நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தனர்.
அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தற்போது தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர். குடும்ப வாழ்க்கை இப்படி இருக்க சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தாடி பாலாஜி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இப்படியான நிலையில் தாடி பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் என்னோட சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 1.5 லட்சம் EMI கட்டிட்டு இருக்கேன். எனக்கு சொந்த வீடு செட் ஆகாதது என்பதால் வாடகை வீட்ல தான் இருக்கேன். அதுக்கான வாடகையும் மாசம் மாசம் கட்டணும்.
இதெல்லாம் போக ஒரு சேப்டிக்காக 40 இல் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை அக்கவுண்டில் இருக்கும். நான் மலேசியா போயிருந்தப்ப ரோல்க்ஸ் எக்ஸ் வாட்ச் வாங்கினேன். சில பொருள்களின் மீது நமக்கு ஒரு ஆசை இருக்கும். அதாவது ஒன்று செய்து சாதிச்சிட்டா இந்த பொருள் வாங்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டிருப்போம். அதன்படி தான் ரொம்ப நாளா எனக்கு பிஎம்டபிள்யூ கார் மீது ஆசை இருந்துச்சு. அந்த கார் வாங்கி என்னுடைய மகளை அதில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே மாதிரி இப்போ எனக்கு 51 வயசு எனக்கு 46 வயசு இருக்கும் போது பிஎம்டபிள்யூ கார் வாங்கி என்னுடைய மகள் மட்டுமல்லாமல் அம்மா தங்கச்சி என எல்லோரையும் அதுல கூட்டிட்டு போய் சந்தோஷப்பட்டேன்.
பாக்குறவங்களுக்கு பிஎம்டபிள்யூ கார் வச்சிருக்கான் ரோலக்ஸ் வாட்ச் நல்லா வாழ்க்கையை வாழ்கிறான் என்று தான் தோன்றும். ஆனால் அதுக்கு பின்னாடி நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். என்னோட வீடு கட்ட 48 லட்சம் செலவு ஆச்சு. அவ்வளவு பணத்தையும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் சம்பாதிச்சேன். விஜய் டிவியில் வேலை பார்த்தா ஏதோ விஜய் டிவி எனக்கே சொந்தமானது மாதிரி பார்க்கிறவங்க பேசுவாங்க. நாம நல்லா இருக்குன்னு சொன்னா எவனுமே அதை பார்த்து சந்தோஷப்பட மாட்டான். ஒவ்வொரு ரூபாயும் கஷ்டப்பட்டால் தான் சம்பாதிக்க முடியும் என்று உணர்ச்சிவசமாக தாடி பாலாஜி பேசியுள்ளார்.