என்னது, விடாமுயற்சி பிளாப் ஆயிடுமா…? பிப்ரவரியில் ரிலீஸ் அடி வாங்கிய அஜித்தின் 7 படங்கள்…

By Soundarya on மாசி 6, 2025

Spread the love

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் அஜித்குமாரின் பிப்ரவரி சென்டிமென்ட் என புதுசாக ஒரு விஷயம் ஆனது தற்போது டிரெண்டாகி கொண்டிருக்கிறது . அஜித் நடித்து பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன படங்கள் தோல்வி அடைந்திருப்பதாக வேறு படங்களின் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

   

அரவிந்த்சாமி மற்றும் ரேவதியுடன் அஜித் இணைந்து நடித்த படம் பாசமலர்கள். இந்த படம் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி ரிலீஸ் ஆனது. சுந்தர் சி இயக்கத்தில் அஜித் மற்றும் மாளவிகா நடிப்பில் வெளியான படம் தான் உன்னை தேடி. இந்த படம் கடந்த 1999 ஆம் வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீசானது. அஜித் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த முகவரி படம் 2000 வருடம் பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் அஜித்துக்கு பெரிய அளவு சக்சஸ் கொடுக்கவில்லை.

   

 

அஜித்  மற்றும் பிரசாந்த் நடித்து 1996 வருடம் பிப்ரவரி 18ஆம் தேதி ரிலீசான படம் கல்லூரி வாசல் இந்த படமும் படுதோல்வியை சந்தித்தது. அஜித்குமாரின் கேரியரிலே பெரிய தோல்வியை சந்தித்த படம் அசல். 2019 பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

2005ஆம் வருடம் பிப்ரவரி 11-ம் தேதி அஜித், திரிஷா நடிப்பில் ரிலீசான படம் ஜூ. இந்த படம் அஜித்துக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அஜித் நடித்த திரைப்படம் வலிமை. 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகி இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.